Saturday, October 31, 2009

கழுகு

கழுகு என்பது ஒரு வலுவான பெரிய பறவையையும் அதன் இனத்தையும் குறிக்கும். இப்பறவைகளுக்கு பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான உகிர்களைக் (உகிர் = நகம்) கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. இவைகளின் கண் பார்வை மிகவும் கூரியது. மிக உயரத்திலே பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்று கீழே பாய்ந்து தம் வல்லுகிரால் கவ்விக் கொண்டு போய் கொன்று உண்ணும். சிறு விலங்குகளை இவ்வாறு கொன்று தின்பதால், இவ் பறவைகளைக் கொன்றுண்ணிப் பறவைகள் (birds of prey) என்று சொல்வதுண்டு. கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளைத் தமிழில் எழால், கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, பூகம், வல்லூறு என அழைக்கப்படுகின்றன. பிணந்தின்னிக் கழுகுகள், பாம்புப்பருந்து, கரும்பருந்து குடுமி எழால் என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.
கழுகு இனங்கள் பெரும்பாலும் பழைய உலகம் என்று சொல்லப்படும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை வெண்டலைக் கழுகும், பொன்னாங் கழுகும் ஆகும். கழுகுகளில் பெட்டைக் கழுகு சேவற்கழுகை விட சற்று பெரிதாக இருக்கும்.

ஆந்தை

ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள், பூச்சிகள், மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும்.
ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், சொண்டையும், மற்றும் facial disk என அழைக்கப்படும், தெளிவாகத் தெரியும், கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது. ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது.
ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை, அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாதவை. எனினும், அவற்றின் பார்வை, விசேடமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது.
பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. facial diskகள், கொறிணிகளிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன.ஆந்தை, ஸ்ட்றைஜிபோர்மெஸ் order ஐச் சேர்ந்த, தனித்த, இரவில் திரியும் 174 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தை முட்டைகள் கிட்டத்தட்டக் கோளவடிவம் கொண்டவை.

ஆந்தைகள் அவற்றின் வகையைப் பொறுத்து, ஒரு சிலவற்றிலிருந்து பன்னிரண்டு வரையிலான முட்டைகளை இடுகின்றன. இவற்றின் கூடுகள் செம்மையற்றவை, மரங்கள், நிலத்தின் கீழான வளைகள், குகைகள் போன்ற இடங்களில் காணப்படும். இந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டில் ஆந்தையின் அலறல், பயத்துக்குரியதாகவும், கெட்ட சகுனமாகவுமே கருதப்பட்டது.

குருவி

குருவி (Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள்,அடைக்கலங்குருவிகள் சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. குருவிகள் உருவத்தில் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். ஆண் பறவையில் இருந்து பெண் வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்.
சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளில் மறைவான இடங்களில் வைக்கோல், மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன.
குருவிகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.
குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

சாரசு கொக்கு

கொக்கு நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட ஒரு பறவையாகும். இவை பொதுவாக வெண்ணிறத்தில் காணப்படுகின்றன. இவை மீன்கள் போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. கழுத்தை நீட்டியபடி பறக்கின்றன. சில கொக்கினங்கள் வலசை போகின்றன.
சாரசு கொக்கு (மாற்று வழக்கு:சாரஸ் கொக்கு) என்பது இந்தியாவில் நடுப்பகுதியிலும், கங்கையாற்றுப் படுகையிலும் வட பாக்கித்தான், நேபாளம், தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா ஆகிய பகுதிகளிலும் காணப்படும் ஒரு வகைப் பெரிய கொக்கு. இது 5 அடி உயரம் வரை இருக்கும்.
தோற்றம்:நன்கு வளர்ந்த சாரசு கொக்குகள், சிவப்பு நிறத்தலையையும் வெளுத்த உச்சந்தலையையும் கொண்டு இருக்கும். அலகுகள் கருத்தவை. இறக்கையின் நுனிப்பகுதி கருப்பாகவும் உடல் வெண்சாம்பல் நிறத்திலும் இருக்கும். ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் ஒத்த தோற்றம் கொண்டன. ஆண் பறவை பெட்டையை விடப் பெரியது. ஆண் பறவைகள் அதிக அளவாக 6.6 அடி உயரம் வரை வளரக்கூடும். இப்பறவையே உலகில் எஞ்சியுள்ள இனங்களில் உயரமான பறக்கும் பறவை ஆகும். சராசரியாக 6.3 முதல் 7.3 கிலோ எடை வரை இருக்கும்.
பழக்கவழக்கங்கள்: மற்ற கொக்குகளைப் போல் இவை நெடுந்தொலைவு வலசை போவதில்லை. இரண்டு முதல் ஐந்து கொக்குகள் வரை கொண்ட சிறிய குழுக்களாக (சிறு தொழுதிகளாக) வாழ்கின்றன. சாரசுகள் அனைத்துண்ணிகள். பூச்சிகள், நீர்த்தாவரங்கள் முதலானவற்றை உணவாகக் கொள்கின்றன. இப்பறவை தரையிலேயே கூடு கட்டுகிறது. இக்கொக்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகள் இடும். ஆண், பெண் (பெட்டை) இருபறவைகளுமே முட்டைகளை அடைகாக்கும். இப்பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடனே வாழ்கின்றன.

அல்பட்ரோஸ்

அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்) பறவைகள் மிகத் திறனுடன் காற்றோட்ட வேறுபாடுகளைப் பயன்படுத்தி அதிக அலுப்பின்றி வெகு தொலைவு பறக்க வல்லவை. இவை நீரில் வாழும் கணவாய் (squid), மீன், குறில் (krill) முதலியவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள் கடலிடையே உள்ள சிறு தீவுகளில் பெருங்கூட்டமாக (தொழுதியாக) வாழ்கின்றன. ஆல்பட்ரோஸ் பறவைகள இணையாக வாணாள் முழுவதும் ஒன்றாகவே (இணை பிரியாமல்) வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலங்களில் ஒரு முறைக்கு ஒரு முட்டைதான் இடுகின்றன.அல்பட்ரோஸ் (ஆல்பட்ரோஸ்), தென்முனைப் பெருங்கடலிலும் வட பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் கடற் பறவையினமாகும். இவை பெரும்பாலும் வெண்ணிறக் கழுத்தும், பெரிய அலகும், மிகப்பெரிய இறக்கை விரிப்பளவும் கொண்டவை. சதை இணைப்புள்ள கால் அடிகள் (கொய்யடிகள்) கொண்டவை. இப் பறவையினம் இன்று உயிர் வாழும் பறவையினங்களிலேயே மிகப் பெரியவைகளின் ஒன்றாகும். இவ்வினத்தின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் டியோமெடைடிடே (Diomedeidae) என்பதாகும். இவ்வினத்தில் 21 வகையான உள்ளினங்கள் உள்ளன ஆனால் அவற்றுள் 19 இனங்கள் மிக அருகிய உயிரினப்பட்டியலில் உள்ளன. பெரும் வெண் ஆல்பட்ரோஸ் என்னும் பறவையின் இறக்கை விரிப்பளவு இன்றுள்ள பறவைகள் யாவற்றினும் மிக நீளமானது.

அரிவாள் மூக்கன்

அரிவாள் மூக்கன் என்பது நீண்ட கால்களையும் வளைந்த அலகையும் கொண்ட ஒரு பறவை இனம். இதன் அலகு வளைந்து அரிவாள் போன்று தெரிவதால் இப்பெயர் பெற்றது. கூட்டமாக இரை தேடும் இப்பறவைகள் சேற்றில் வாழும் உயிரினங்களைத் தின்கின்றன. மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றன.
வெள்ளை அரிவாள் மூக்கன் பறவையின் உடல் பகுதி வெண்மையாகவும், கால், கழுத்து, மூக்கு கருப்பாகவும் உள்ளது.

குயில்

குயில் (Cuculus micropterus) தென்னாசிய நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் குயில் இனமாகும்.குயில் ஒரு அடையுருவி ('brood parasite'). இது மரத்தில் வாழும் பறழ்பறவை -- அதாவது தரையில் காணப்படாது. பழங்களும் சிறு கனிகளும் நிறைந்துள்ள தோட்டம், தோப்பு ஆகிய இடங்களே குயில்களின் வருகைக்குகந்தவை. குயில்கள் கூடு கட்டாமல் பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிடுபவை.
இந்தியக் குயில்கள் பெரும்பாலும் காகக் கூடுகளில் முட்டையிடுகின்றன. முட்டையின் நிறம் வெளுப்பான பச்சை. குயிற் குஞ்சுகள் முதலில் பொரிப்பதோடு வேகமாகவும் வளர்கின்றன. இந்தியக் குயில் 33 சென்டி மீட்டர் வரை வளர்கிறது.ஆல், அத்திப்பழங்களை முதன்மையாக உண்ணும். பூச்சிகளையும் மயிர்க்கொட்டிகளையும் உண்கிறது.
ஆசியக் குயில் (Eudynamys scolopacea) தமிழ் நாட்டில் நாம் அனைவரும் அறிந்த குயில் இதுவே. இது சுமார் 43-45 செ.மீ அளவு வரை இருக்கும்.
(பெண்களின்) இனிமையான குரல் வளத்திற்கு உவமையாக குயிலின் கூவலைக் கூறுதல் வழக்கத்தில் இருந்தாலும், உண்மையில் இனிமையான குவூ குவூ சத்தத்தை எழுப்புவது ஆண்குயிலே.
தாழ்ந்த ஒலியுடன் இனிமையாகத் துவங்கும் குவூ கூப்பாடு படிப்படியாக சத்தம் அதிகரித்து, ஏழாவது அல்லது எட்டாவது கூப்பாட்டுடன் திடுமென நின்று விடும்; பிறகு மீண்டும் அதே கதியில் பாடல் ஆரம்பிக்கும்.
ஆண் குயிலின் சங்கீதக்குரலுடன் ஒப்பிட்டால் பெண் குயிலின் கிக் - கிக் - கிக் என்ற கூப்பாடு வெறும் கத்தல் எனலாம்.

மைனா

இது ஒரு வகையான மைனா "பாலி மைனா" ஆகும். மைனா, starlingகள் மற்றும் oxpeckerகளுடன் சேர்த்து, மைனாக்கள் ஸ்ட்டேண்டிடே குடும்பத்துள் அடங்குவன. பசரீன் பறவைகள் குழுவைச் சேர்ந்த இவை, இயற்கையாகக் கிழக்காசியாவில் மட்டுமே வாழ்கின்றன, எனினும் இவற்றின் பல வகைகள், வட அமெரிக்காவுக்கும், சாதாரண மைனா தென்கிழக்கு அவுஸ்திரேலியா]]வுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மைனாக்கள் வலுவான பாதங்களைக் கொண்ட, நடுத்தர அளவிலான பசரீன்களாகும். இவற்றின் பறப்பு வலுவானதும் நேரானதுமாகும். இவை கூட்டமாக வாழ்வன. இவை விரும்பும் வாழிடம் ஓரளவு திறந்த வெளிகளாகும். இவை பூச்சிகளையும், பழங்களையும் உண்ணுகின்றன. பல வகைகள் மனித வாழிடங்களுக்கருகில் வசிப்பதுடன், எல்லாவகை உணவுகளையும் உண்ணக்கூடியன.
உடல் நிறம் பொதுவாகக் கடுமையானது, அதிகம் மண்ணிறம். சில வகைகள் மஞ்சள் நிறத்திலான தலை அலங்காரங்களைக் கொண்டுள்ளன.பெரும்பாலான வகைகள் பொந்துகளிலேயே கூடு கட்டுகின்றன.

வாத்து

வாத்து ஒரு பறவை ஆகும். பொதுவாக வாத்துக்கள் அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் மனிதர்களால் வளர்க்கப்படுகின்றன. வாத்துக்கள் நீரில் நீந்த வல்லவை. குறிப்பாக ஆசிய மக்கள் வாத்துக்களை உண்கிறார்கள். இதில் பல வகை உண்டு. கனடா வாத்து அல்லது கனடா கூஸ் என்பது வட அமெரிக்காவில் வாழும் வாத்து வகையைச் சேர்ந்த ஒரு பறவை. இதன் முகமும் கழுத்தும் கருப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தின் தொடக்கத்தில் வெள்ளை நிறமான வளைய வடிவம் உண்டு. இதன் உடல் வெள்ளையும் சாம்பலமும் கலந்த நிறம் கொண்டது. கனடா வாத்து 76-110 செமீ நீளம் வரை வளரும். ஆண் வாத்து 3.2-6.5 கிகி எடை உடையது. விரிந்திருக்கும் போது இதன் இறக்கை 127-180 செமீ வரை இருக்கும்.

கிளி


கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவை சிறப்பியல்பான வளைந்த அலகு கொண்டன. கிளிகள் zygodactyl, அதாவது ஒவ்வொரு காலிலும், முன்பக்கம் இரண்டும், பின்பக்கம் இரண்டுமாக நான்கு விரல்கள் அமையப் பெற்றவை.
பழங்களும் கொட்டைகளும் கிளிகளின் முக்கிய உணவு. கிளிகள் மாந்தரின் பேச்சைக் கேட்டு அதைப்போலவே ஒலி எழுப்ப வல்லவை. பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும்.கிளிகளிடம் மக்கள் அதிகம் பேச விரும்புகின்றனர். பேசும் கிளிகளோ சொன்னதைச் சொல்லி மகிழ்ச்சியை உண்டாக்கும். சிறிய பொம்மைக்காரை ஓட்டும். ஊஞ்சல் ஆடும். வித்தைகள் கற்றுக்கொடுத்தால் அதையும் செய்யும். பேசாத கிளிகளோ ‘ஆம்’ ‘இல்லை’ என்பதற்கு ஏற்பச் செயல்படும். இதனால், நடக்க முடியாத, பேச முடியாத நோயாளிகூட இவ்விரண்டையும் உள் எழுச்சியின் மூலம் ஊக்கம் பெற்றுச் செய்து காட்டிவிடுவார். கிளிகளுக்கு அறிவு, திறமை, முக்கியமான வேலைகளைச் செய்யும் ஆற்றல், மனிதர்கள் பேசுவதை புரிந்துகொள்ளும் ஆற்றல் முதலியன உள்ளன. அதனால்தான் கிளிகளைத் தேர்வு செய்தார்கள். அடுத்து, ‘ஏ பேர்ட் இன் தி ஹேண்ட்’ என்று இந்தத் திட்டத்திற்கு பெயர் சூட்டினார்கள். பேசும்கிளி வளர்த்தால், இருவர் உரையாடும்போது அதைக்கேட்டு அப்படியே அது மிமிக்ரி செய்யும். மூன்று நோயாளிகளையும் ஒரு பேசும் கிளியையும் வைத்துப் பேசப் பயிற்சி அளித்தால் போதும். எஞ்சிய நேரங்களில் கிளியே கொஞ்சி கொஞ்சிப் பேசி நோயாளிகளைப் பேச வைத்துவிடுமாம்.வீட்டில் கிளி வளர்க்க ஆரம்பித்தால் குழந்தைகளும் பெரியவர்களும் மிகுந்த நலத்துடன் இருப்பார்கள். நடுத்தர வயதுக்காரர்கள், பெரிய பறவைக்கூண்டில் பல்வேறு வகையான கிளிகளை வளர்த்து வந்தால் குடும்பச் சூழ்நிலைகளில் உள்ள கடுமை, கோபம் முதலியன குறையுமாம். குருவி வகைகளும் இதே அளவு நன்மைகள் செய்கின்றன.

புறா

புறா முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரின வகைப்பாட்டில் இது கொலம்பிடே (Columbidae) குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் ஏறத்தாழ 300 வகை இனங்கள் உள்ளன. புறாக்கள் உலகெங்கிலும் உள்ளன என்றாலும், இந்தியா, மலேசியா, இந்தோனீசியா முதலிய தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன.
இது தானிய வகைகளை மட்டும் உணவாக உண்ணும் பயிறுண்ணிப் பறவை ஆகும். பறவைகளிலேயே புறா மட்டுமே தண்ணீரைத தன் அலகால் உறிஞ்சிக் குடிக்கும் பழக்கமுடையது என்றும் சொல்லப்படுவதுண்டு. இது வீட்டிலும் செல்லப்பறவையாக வளர்க்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள் உருவத்தில் சிறியனவாகவும் சாதுவாகவும் காணப்படும். காட்டுப்புறாக்கள் உருவத்தில் சற்றுபெரியவை.

பென்குயின்

பென்குயின்கள், நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், Eocene சகாப்தத்தில் உருவாகின. பொதுவாகப் பெரிய பென்குயின்கள், சிறப்பாக வெப்பத்தை உள்ளே வைத்துக்கொள்ளக் கூடியவையாக இருப்பதால், அதிக குளிர்ப் பகுதிகளில் வாழக்கூடியவையாக உள்ளன. சிறிய வகைகள் மிதவெப்பக் காலநிலைப் பகுதிகளிலிலோ வெப்பக் காலநிலைப் பகுதிகளிலோ கூடக் காணப்படுகின்றன.பென்குயின்கள் (order ஸ்பெனிசிபோர்மெஸ், குடும்பம் ஸ்பெனிசிடே) தென் அரைக் கோளத்தில் வாழ்கின்ற, பறக்காத பறவைகளாகும். பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இவை அண்டார்டிகா போன்ற குளிர்ப் பகுதிகளில் மட்டும் வாழ்பவை அல்ல. இவற்றுள் பல வகைகள், வடக்கே கலப்பகோஸ் தீவுகள் வரை கூட வாழ்வதுடன் சில சமயம் உணவுக்காகப் பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. பல பென்குயின்கள் உயிர் வாழ்வுக்கு க்ரில் , மீன், ஸ்ஃஉஇட்(squid) முதலிய கடல்வாழ் உயிரினங்களைச் சார்ந்துள்ளன. நீரின் கீழ் நீந்தி இவற்றைப் பிடித்து உண்கின்றன. இவற்றின் செவிப்புலன் மிகச் சிறப்பானது. கண்கள் நீர்க் கீழ்ப் பார்வைக்கு ஏற்ப இசைவாக்கம் பெற்றுள்ளன. இவையே உணவைப் பிடிப்பதற்கும், பிற விலங்குகளிடமிருந்து தப்புவதற்குமான, பென்குயின்களின் முதன்மையான வழியாகும். காற்றில் இவைகளால் நீண்டதூரம் பார்க்க முடியாது. இவற்றின் மணக்கும் சக்தி பற்றி அதிக தகல்வல்கள் தெரிய வரவில்லை. நிலத்தில் பென்குயின்களின் நடத்தை லாவகமற்றது. அவை காலால், இருபுறமும் அசைந்து அசைந்து நடக்கின்றன அல்லது அவற்றின் வயிற்றினால் பனிக்கட்டியின் மீது வழுக்கிச் செல்கின்றன. ஆனாலும், உண்மையில் பெரும்பாலான மனிதர்களுக்கு ஈடாக அல்லது அவர்களிலும் வேகமாக ஓடுவதற்கும் பென்குயினால் முடியும். சக்தியைச் சேமிப்பதற்காகவும் அதேவேளை வேகமாக நகர்வதற்காகவும் இவை வயிற்றினால் வழுக்கிச் செல்கின்றன. இது "தொபோகானிங் (tobogganing)" என அழைக்கப்படுகின்றது.

மயில்

மயில்கள், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது.

கோழி


கோழி மனிதனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் ஒரு பறவையாகும். இதில் பெண்ணினம் கோழி எனவும் ஆணினம் சேவல் எனவும் வழங்கப்படுகிறது. 2003-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது . இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் தொழில்முறை கோழிப் பண்ணைகளுக்கு பெயர் பெற்ற ஊராகும்.

காகம்


காகம் என்பது பொதுவாக கரிய நிறம் கொண்ட பறவை ஆகும். இது பறவைகளில் கூடுதல் அறிவுத் திறன் பெற்றதாகக் கருதப்படுகிறது. இது மக்கள் வாழும் இடங்களில் அதிகமாக இருந்து கொண்டு அவர்கள் வெளியிடும் குப்பைகளையும் மற்ற வீண்பொருட்களையும் உண்டு வாழ்கிறது. இதன் காரணமாக சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் ஒரு பங்கு வகிக்கிறது.
இவற்றை மிக இலகுவாக பயிற்றுவிக்க முடியும். காகங்களை பழக்கி இலகுவாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்த முடியும் என்பதால் இவற்றை செல்லபறவைகளாக வளர்ப்பது சில நாடுகளில் சட்டவிரோதமானதாகும்.காகங்களில் ஆஸ்திரேலிய, வட அமெரிக்க, ஆபிரிக்க, ஐரோப்பிய, ஆசிய இனங்கள் பல உள்ளன. கரியன் காகம், வீட்டுக் காகம் ஆகியன ஆசியக் காக இனங்களாகும்.