
ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், சொண்டையும், மற்றும் facial disk என அழைக்கப்படும், தெளிவாகத் தெரியும், கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது. ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது.
ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை, அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாதவை. எனினும், அவற்றின் பார்வை, விசேடமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது.
பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. facial diskகள், கொறிணிகளிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன.ஆந்தை, ஸ்ட்றைஜிபோர்மெஸ் order ஐச் சேர்ந்த, தனித்த, இரவில் திரியும் 174 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தை முட்டைகள் கிட்டத்தட்டக் கோளவடிவம் கொண்டவை.
ஆந்தைகள் அவற்றின் வகையைப் பொறுத்து, ஒரு சிலவற்றிலிருந்து பன்னிரண்டு வரையிலான முட்டைகளை இடுகின்றன. இவற்றின் கூடுகள் செம்மையற்றவை, மரங்கள், நிலத்தின் கீழான வளைகள், குகைகள் போன்ற இடங்களில் காணப்படும். இந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டில் ஆந்தையின் அலறல், பயத்துக்குரியதாகவும், கெட்ட சகுனமாகவுமே கருதப்பட்டது.
No comments:
Post a Comment