Saturday, October 31, 2009

குயில்

குயில் (Cuculus micropterus) தென்னாசிய நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் குயில் இனமாகும்.குயில் ஒரு அடையுருவி ('brood parasite'). இது மரத்தில் வாழும் பறழ்பறவை -- அதாவது தரையில் காணப்படாது. பழங்களும் சிறு கனிகளும் நிறைந்துள்ள தோட்டம், தோப்பு ஆகிய இடங்களே குயில்களின் வருகைக்குகந்தவை. குயில்கள் கூடு கட்டாமல் பிற பறவைகளின் கூடுகளில் முட்டையிடுபவை.
இந்தியக் குயில்கள் பெரும்பாலும் காகக் கூடுகளில் முட்டையிடுகின்றன. முட்டையின் நிறம் வெளுப்பான பச்சை. குயிற் குஞ்சுகள் முதலில் பொரிப்பதோடு வேகமாகவும் வளர்கின்றன. இந்தியக் குயில் 33 சென்டி மீட்டர் வரை வளர்கிறது.ஆல், அத்திப்பழங்களை முதன்மையாக உண்ணும். பூச்சிகளையும் மயிர்க்கொட்டிகளையும் உண்கிறது.
ஆசியக் குயில் (Eudynamys scolopacea) தமிழ் நாட்டில் நாம் அனைவரும் அறிந்த குயில் இதுவே. இது சுமார் 43-45 செ.மீ அளவு வரை இருக்கும்.
(பெண்களின்) இனிமையான குரல் வளத்திற்கு உவமையாக குயிலின் கூவலைக் கூறுதல் வழக்கத்தில் இருந்தாலும், உண்மையில் இனிமையான குவூ குவூ சத்தத்தை எழுப்புவது ஆண்குயிலே.
தாழ்ந்த ஒலியுடன் இனிமையாகத் துவங்கும் குவூ கூப்பாடு படிப்படியாக சத்தம் அதிகரித்து, ஏழாவது அல்லது எட்டாவது கூப்பாட்டுடன் திடுமென நின்று விடும்; பிறகு மீண்டும் அதே கதியில் பாடல் ஆரம்பிக்கும்.
ஆண் குயிலின் சங்கீதக்குரலுடன் ஒப்பிட்டால் பெண் குயிலின் கிக் - கிக் - கிக் என்ற கூப்பாடு வெறும் கத்தல் எனலாம்.

No comments:

Post a Comment