skip to main |
skip to sidebar
கரிபியக் கடல்
கரிபியக் கடல் மேற்கு அரைக்கோளத்தில் மெக்சிகோ குடாவிற்கு தென்கிழக்கில் அமைந்துள்ள அயனமண்டல ஒரு கடலாகும். இது அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். இக்கடல் கரிபிய புவியோட்டின் பெரும் பகுதியை அடைத்துக் கொண்டிருக்கிறது. இதன் எல்லைகளாக தெற்கில் தென் அமெரிக்காவும், மேற்கே மத்திய அமெரிக்காவும் , மெக்சிகோவும், வடக்கிலும் கிழக்கிலும் அண்டிலுசு: பாரிய அண்டிலிசு தீவுகளான கியூபா, இஸ்பனியோலா , யமேக்கா , போட்ட ரிக்கோ வடக்கிலும் சிறிய அண்டிலுசுத் தீவுகள் கிழக்கிலும் அமைந்துள்ளன. கரிபியக்கடலின் முழுமையும் அதில் அமைந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அனைத்தும், அருகே அமைந்துள்ள கடற்கரைகளும் கூட்டாக கரிபியம் என அழைக்கப்படுகிறது.
2,754,000 சதுர கிலோமீட்டர் (1,063,000 சதுர மைல்). பரப்பளவைக் கொண்ட கரிபியக்கடல் உலகில் பாரிய உப்புக்கடல்களில் ஒன்றாகும். கடல் மட்டத்துக்குக் கீழ் 7,686 மீ. (25,220 அடி) ஆழமுடைய கரிபியக் கடலின் ஆழமான புள்ளி கியுபாவுக்கும் யமேக்காவுக்குமிடையே அமைந்துள்ள கேமன் ஆழியாகும். கரிபியக் கடற்கரை பல குடாக்களையும், விரிகுடாக்களையும் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment