Thursday, October 29, 2009

நொச்சி

நொச்சி (Vitex Negundo) குளம் குட்டைகளின் கரையோரங் களிலும் பாதையோரங்களிலும் பக்கக் கிளைகளுடன் படர்ந்து வளரும் சிறு செடியாகும். மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது.
நொச்சி இலை நெற்பயிருக்குத் தழையுரமாகவும் விலங்குகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. நொச்சி இலையின் மணம் காரணமாகச் சில பூச்சிகள் இதனை நெருங்குவதில்லை. ஆதலால் தானியப் பாதுகாப்பில் நொச்சி இலை பயன்படுகிறது. ஓலைச் சுவடிகளைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.

மல்லிகை

மல்லிகை (Jasminum sambac) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியன்மார் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையன. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் பயன்படுகிறது. மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய இது பயன்படுகிறது. இது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.மதுரை மல்லிகை மிகவும் புகழ் வாய்ந்தது.

தாமரை

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை அங்கிருந்து, பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

அல்லிப்பூ

அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.

Wednesday, October 28, 2009

ரோஜா


ரோஜா பூ,ரோசா மரபின் ரோசசிகுடும்பத்தை சேர்ந்த ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகையை சேர்ந்தது. இதில் நூறு வகைகளும் பலவித வண்ணங்களும் உண்டு. இந்த தாவரம் மேலே ஏறுகிற அல்லது இறங்குகிற செங்குத்தான புதர்காடாக அமைந்து இதன் தண்டு பகுதி பெரும்பாலும் கூரிய முட்கள் கொண்டதாக இருக்கும். ரோஜாவில் முட்கள் உண்டு என்பது ஒரு பொதுவாக நிலவுகிற பிழையான கருத்தாகும். முட்கள் என்பவை திருத்தி அமைக்கப்பட்ட கிளைகள் அல்லது தண்டுகள், ஆனால் ரோஜாவில் காணப்படும் இந்தக் கூரிய நீண்ட அமைப்புகள் திருத்தி அமைக்கப்பட்ட மேல் தோல் போன்ற திசுக்களாகும் (கூர்முனைகள்). இந்த தாவர வகையில் பெரும்பாலானவை ஆசிய கண்டத்தை சேர்ந்தவை. சில வகைகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, வடமேற்கு ஆபிரிக்காவை சேர்ந்தவை. பூர்விக வகைகள், பயிரிடு வகைகள் மற்றும் கலப்பின வகைகள் இவை அனைத்தும் இவற்றின் அழகு மற்றும் நறு மணத்திற்காக பரவலாக வளர்க்கப்படுகின்றன.
இதன் இலைகள் ஒன்று விட்டு ஒன்றாக இறகு போன்ற அமைப்புடனும் கூரிய முனைகளுடன் நீள்வட்ட வடிவத்தில் சிறுசிறு இலைக்கொத்துக்களாகவும் இருக்கும். இந்தத் தாவரத்தின் உட்கொள்ளக்கூடிய சதைப்பிடிப்பான பழம் "ரோஜாவின் இடுப்பு" என்று அழைக்கப்படுகிறது. மெலிந்த, மிகச்சிறிய ரோஜா மலர் வகையிலிருந்து 20 மீட்டர் உயரம் ஏறக்கூடிய வகை வரை ரோஜா தாவரம் வடிவத்தில் பலவகைப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த தாவர வகைகளை எளிதாக கலப்பியலுக்கு உட்படுத்த முடிவதால், பல விதமான தோட்ட ரோஜாக்களைக் காண முடிகிறது.